- Home
- Gallery
- Indian 2: 28 வருட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான 'இந்தியன் 2 '! வெறிச்சோடிய தியேட்டர்கள்? அரசியல் தான் காரணமா?
Indian 2: 28 வருட எதிர்பார்ப்புக்கு பின் வெளியான 'இந்தியன் 2 '! வெறிச்சோடிய தியேட்டர்கள்? அரசியல் தான் காரணமா?
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'இந்தியன் 2' படம் 28 ஆண்டுகளுக்கு பின்னர், இரண்டாம் பாக படமாக வெளியாகியுள்ள நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வரவேற்பை பெறாமல் ரசிகர்கள் கூட்டம் குறைந்து காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே திரையரங்கம் களைகட்டும். ரசிகர்கள் ஆடல், பாடல், மேள, தாளத்துடன், பட்டாசுகள் வெடித்து தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை வரவேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Indian 2
ஆனால் இன்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் 'இந்தியன் 2' திரைப்படங்கள் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் மற்றும் கல்கி ஆகிய இரண்டு படங்கள் வெற்றி படங்களாக இருந்த போதும் ஏன் இந்த படத்திற்கான வரவேற்பு குறைந்தது என பலர் ஆதங்கத்துடன் தங்களின் கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள்.
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாள் காலை 5 மணிக்கே முன்பெல்லாம் ஸ்பெஷல் ஷோ இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஸ்பெஷல் ஷோ 9 மணிக்கு திரையிட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது. எனவே பல ரசிகர்கள் புதுவை, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு முதல் நாள் ஷோ பார்க்க செல்வதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
Indian 2
இப்படம் வெளியானதில் இருந்து முதல் பாகத்துடன் 'இந்தியன் 2' படத்தை ஒப்பிடும் போது, சுமாராகவே இருப்பதாக கலவையான விமர்சனம் கிடைத்து வருவதால் வேண்டும் என்றே சிலர் இப்படத்திற்கு எதிராக விமர்சனங்களை கூறி வருவதாகவும் ஒரு பரபரப்பு நிலவி வருகிறது.
Indian 2
அதே போல் கமல் நடிகராக மட்டும் இன்றி ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அரசில் ரீதியாக பழிவாங்கும் படலமாகவே திட்டமிட்டு திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை என்றும், கூறப்படும் நிலையில்... இதுபோன்ற விமர்சனங்களையும், சதி திட்டங்களையும் கடந்து உலக நாயகன் வசூல் ரீதியாக சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.