- Home
- Gallery
- சேனாதிபதி இதுக்காக தான் இந்தியா திரும்புறாரா? இணையத்தில் லீக் ஆன இந்தியன் 2 படத்தின் கதை..
சேனாதிபதி இதுக்காக தான் இந்தியா திரும்புறாரா? இணையத்தில் லீக் ஆன இந்தியன் 2 படத்தின் கதை..
இந்த நிலையில், 'இந்தியன் 2' கதை பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,

Kamal Haasan Indian 2 film update out
ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
Indian 2
இந்தியன் படத்தின் 2-வது பாகமான இந்தியன் 2 படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
kamal haasan shares the release plans of indian 2 and indian 3 at ipl venue
எனினும் கிரென் விபத்து, கொரோனா என பல தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாக ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 உள்ளது.
Indian 2
இந்த நிலையில், 'இந்தியன் 2' கதை பற்றிய ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, சமூக ஊடகங்களில் ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு இளைஞருக்கு (சித்தார்த்) ஆதரவாகப் போராட சேனாபதி (கமல்ஹாசன்) இந்தியாவுக்குத் திரும்புவதுதான் 'இந்தியன் 2' படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து சித்தார்த்தை காப்பாற்ற சேனாபதி இந்தியா திரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே 'இந்தியன் 2' படத்தில் இருந்து இதுவரை இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. '
Indian 2
இந்த படம் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த படம் ஏதேனும் சர்ச்சையை எதிர்கொள்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை தெரிந்து கொள்ள ஜூலை 12-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
Indian 2
இந்தியன் 2' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியன் 2 படத்தின் நீளம் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளதால் இதை 2 பாகமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியன் 3 படம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.