ஸ்ருதியிடம் கூட கமல் ரொமான்ஸ் செய்வார்.. பரபரப்பை கிளப்பிய டாப் ஹீரோ!
Kamal Haasan : அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை பேசி பரபரப்பு ஏற்படுத்தும் டாப் நடிகர் ஒருவர், இப்போது உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து பேசியுள்ளார்.

kamalhaasan
தமிழ் சினிமாவில் தனது ஐந்தாவது வயது முதல் நடித்து வரும் மிகப்பெரிய நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். திரைத்துறையை பொறுத்தவரை அவர் கற்றுக்கொள்ளாத பணிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.
DD Neelakandan: மீண்டும் மணப்பெண் கோலத்தில் டிடி; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி
Suman
இந்நிலையில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் காலத்திலேயே, மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சுமன், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ள சில சர்ச்சை கருத்துக்கள், இப்பொது இணையவாசிகள் மத்தியில் கோவத்தை கிளப்பியுள்ளது.
actor suman
கடந்த 1978ம் ஆண்டு தமிழில் வெளியான "கருணை உள்ளம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் சுமன். சுமார் 10 மொழிகளில் 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஆவர், தமிழ் திரை உலகிலும், தெலுங்கு திரையுலகிலும் பல முன்னணி நட்சத்திரங்களோடு போட்டி போட்டு நடித்து புகழ் பெற்றவர். அதேசமயம் சர்ச்சையான கருத்துக்களை முன்வைப்பதிலும் இவர் பெயர் பெற்றவர். சில வருடங்களுக்கு முன்பு கற்பழிப்பு வழக்கு ஒன்றில் அவர் சிறை சென்றதும் நினைவுகூறத்தக்கது.
Shruti Haasan
இந்த சூழலில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சுமன், உலக நாயகன் கமலஹாசன் பிறவியிலிருந்தே ஒரு மிகச் சிறந்த நடிகர். இன்று இருக்கும் இளம் ஹீரோக்கள் அவரை முன்மாதிரியாக வைத்துத்தான் நடித்து வருகின்றனர். அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை போல எவராலும் மேக்கப் போட்டு நடிக்க முடியாது. ஏன் ரொமான்ஸ் செய்வதிலும் அவர் மிகவும் கைதேர்ந்தவர், அவசியம் ஏற்பட்டால் மூத்த மகள் சுருதிஹாசனோடு கூட அவரால் இணைந்து ரொமான்ஸ் காட்சியில் நடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
kollywood actor suman
நடிகர் மற்றும் அரசியல் தலைவர் சுமன் கூறிய இந்த கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் தற்பொழுது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் கமலின் நடிப்பை குறித்து மட்டுமே பேசியதாக, நடிகர் சுமனின் நலம் விரும்பிகள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
GOAT படத்தில் நடித்ததற்கு இது கைமாறா? பிரஷாந்துடன் கைகோர்த்த பிரபு தேவா.. தளபதி செய்யப்போகும் உதவி!