- Home
- Gallery
- TVK Vijay : கள்ளக்குறிச்சியில் த.வெ.க தலைவர்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன விஜய் - வெளியான போட்டோஸ்!
TVK Vijay : கள்ளக்குறிச்சியில் த.வெ.க தலைவர்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன விஜய் - வெளியான போட்டோஸ்!
Vijay in Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய 40க்கும் அதிகமானோர் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

TVK Leader Vijay
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே கருனாபுரம் என்கின்ற பகுதியில் விஷச்சாராயம் அருந்திய 40-க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கள்ளக்குறிச்சிக்கு சென்றிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய்.
Vijay in Kallakurichi
இந்த சம்பவம் குறித்து அவர் ஏற்கனவே வெளியிட்ட ஒரு அறிக்கையில் "விஷச்சாராயம் அருந்தி பலர் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்".
TVK
"கடந்தாண்டு இதே நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த தூரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது".
Kallakurichi
"இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தும் இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்தும் தற்பொழுது தளபதி விஜய் ஆறுதல் கூறிவருகின்றார்.
கள்ளச்சாராய மரணத்திற்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? சீமான் காட்டம்