- Home
- Gallery
- பாகுபலி, KGF, RRR வரிசையில் 1000 கோடி கிளப்பில் இணையும் கல்கி 2898 AD; அந்த ஒன்ன மட்டும் கவனிச்சீங்களா?
பாகுபலி, KGF, RRR வரிசையில் 1000 கோடி கிளப்பில் இணையும் கல்கி 2898 AD; அந்த ஒன்ன மட்டும் கவனிச்சீங்களா?
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள கல்கி 2898 ஏடி படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், சுவாரஸ்யமான கதை ஆகியவை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

rrr
இந்திய திரையுலகம் என்றாலே பாலிவுட் என்ற அளவுக்கு ஒரு காலத்தில் பாலிவுட் படங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. பாலிவுட்டில் உருவாகும் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. விமர்சன ரீதியாகவும் சரி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனைகளை பல பாலிவுட் படங்கள் படைத்து வந்தன.
pathaan
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை. ஷாருக்கானின், பதான், ஜவான் மற்றும் சில படங்கள் தவிர பெரிய நடிகர்களின் படங்கள் கூட வந்த சுவடே தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கின்றன.
baahubali
மறுபுறம் தென்னிந்திய சினிமா அசுர வளர்ச்சியை கண்டு வருகிறது. பாகுபலி படங்கள் பான் இந்தியா அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில் RRR, கேஜிஎஃப் 1, 2, காந்தாரா, புஷ்பா, பொன்னியின் செல்வன், விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற படங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிரட்டி உள்ளன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான கல்கி படமும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.
kalki 2898 ad
நாக் அஸ்வின் இயக்கத்தில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி உள்ள கல்கி 2898 ஏடி படம் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது. 600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் திஷா பதானி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.
kalki 2898 ad
கல்கி 2898 ஏடி படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், சுவாரஸ்யமான கதை ஆகியவை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை இப்படம் 900 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் 1000 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kalki 2898 ad
இந்த படம் 1000 கோடி வசூலை எட்டும் பட்சத்தில் பாகுபலி 2, RRR, கே.ஜி.எஃப் படங்களை தொடர்ந்து இந்தியாவின் அதிக வசூல் செய்த தென்னிந்திய படங்களில் கல்கி 2898 ஏடி படமும் ஒன்றாக மாறும். இதன் மூலம் இந்திய சினிமாவை உயர்த்தி பிடிக்கும் இடத்தில் தென்னிந்திய படங்கள் உள்ளன.
இவை தவிர காந்தாரா 2, புஷ்பா 2, இந்தியன் 2, தேவாரா, கங்குவா என்று பல பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றனர். இந்த படங்களுக்கு பான் இந்தியா அளவில் நல்ல ஓபனிங் இருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் இதில் சில படங்களும் 1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.