- Home
- Gallery
- இரண்டே நாளில் 300 கோடியை... நெருங்கிய பிரபாஸின் 'கல்கி 2898 AD'! வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!
இரண்டே நாளில் 300 கோடியை... நெருங்கிய பிரபாஸின் 'கல்கி 2898 AD'! வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!
'கல்கி 2898 AD' படத்தின், முதல் நாள் வசூலை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது போன்று... இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவலையும் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது 'கல்கி 2898 AD'. பிக் பட்ஜெட் படங்களை குறிவைத்து நடிக்கும் பிரபாஸ், நடிப்பில் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உட்பட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்திருந்தது.
ஜூன் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம், சயின்ஸ் ஃபிக்சன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிசியிலும் ரூ.191.5 கோடி வசூலை வாரி குவித்தது.
அப்பாவின் கடைசி தருணம்... தம்பி ஆகாஷின் முதல் பட விழாவில் எமோஷ்னலாக பேசி கலங்கிய அதர்வா முரளி!
இதன் மூலம், பாகுபலி, ஜவான் போன்ற பல படங்களின் முதல் நாள் வசூல் முறியடிக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் இல்லை என்பதால்... இப்படம் 300 கோடியை நெருக்கமா? என கேள்வி எழுந்தது. ஆனால் கிட்ட தட்ட 300 கோடி வசூலை 'கல்கி' திரைப்படம் நெருங்கிய சந்தோஷமான தகவலை தயாரிப்பு நிறுவனமான வைஜெந்தி மூவிஸ் அறிவித்துள்ளது.
அதாவது இப்படம் நேற்றைய தினம் ரூ 298.5 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால்... 5 நாட்களில் 600 கோடி வசூலை வாரி குறிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் கல்கி படத்தை பார்த்து விட்டு, இந்திய சினிமாவில் அடுத்த மையில் கல் என இந்த படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கௌதமி, மனிஷா கொய்ராலா முதல் ஹிரா கான் வரை..! கொடூர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்!