- Home
- Gallery
- பிரபாஸின் 'கல்கி 2898 AD' படம் முதல் நாளே உலகளவில் செய்த வசூல் இத்தனை கோடியா? படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பு!
பிரபாஸின் 'கல்கி 2898 AD' படம் முதல் நாளே உலகளவில் செய்த வசூல் இத்தனை கோடியா? படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பு!
பிரபாஸ் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா ஸ்டாராக மாறிய பிரபாஸ்... தொடர்ந்து பிக்பட்ஜெட் படங்களை குறிவைத்தே நடித்து நடித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்கள் படு தோல்வியை சந்தித்தது. அதிலும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு... 500 கோடி செலவில் எடுத்த பொம்மை படம் என கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானது.
Kalki 2898 AD Kerala collection report out
எப்படியும் வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என போராடிய பிரபாஸ்... KGF பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடித்த சலார் திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை பெற்று மீண்டும் பிரபாஸை தலைநிமிர செய்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பிரஷாந்த் நீல் தற்போது தயாராகி வருகிறார்.
இதற்க்கு இடையே, பிரபாஹ்ஸ் பேண்டஸி கதைக்களத்தில் , ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படத்தை பிரபல இளம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க, மற்றொரு நாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியா படமாக நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியானதில் இருந்தே படத்திற்கு தொடர்ந்து நல்ல விதமான விமர்சனம் கிடைத்து வந்த நிலையில்...வார இறுதியில் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும், உலக அளவில் இப்படம் 200 கோடி ரூபாய் வசூலை எட்டி இருக்கும் என திரைப்பட வணிகவியாளர்கள் கூறி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் வசூல் குறித்து... படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ரூ.191.5 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிட்ட தட்ட 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.