81 வயதிலும் கல்கி 2898 ஏடி படத்தில் மிரள வைத்த அமிதாப்பச்சன்.. அவரின் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்..
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 81 வயதிலும் எப்படி தனது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறார் தெரியுமா? அவரின் ஆரோக்கிய பயிற்சியாளர் இதுகுறித்து பேசி உள்ளார்.
திரை பிரபலங்கள் பலரும் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்க கடுமையான டயட் முறைகளையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்/ அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 81 வயதிலும், பிஸியான வேலை அட்டவணையிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.
ஏறக்குறைய 24 ஆண்டுகளாக அமிதாப் பச்சனுடன் பணிபுரிந்த அவரது ஆரோக்கிய பயிற்சியாளர் விருந்தா மேத்தா, சமீபத்தில் அமிதாப் பின்பற்றும் பயிற்சி பற்றி பேசினார். இதுகுறித்து பேட்டியளித்த அவர் "அமிதாப் பச்சன் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கினால், சாதாரண மக்களும் அதை செய்யலாம். உங்களுக்கு ஏதாவது நல்லது என்று தெரிந்தால், அதைச் செய்யுங்கள். இது ஆறுதலைப் பற்றியது அல்ல, அது நேரம் இல்லாதது பற்றி அல்ல. உடல் ஆரோக்கியத்தை பற்றியது..” என்று கூறினார்.
அமிதாப் பச்சன் செய்யும் உடற்பயிற்சியைப் பகிர்ந்து கொண்ட விருந்தா, "அமிதாப் சார் உடனான எனது அமர்வுகள் மூச்சுப் பயிற்சியைப் பற்றியது. நாங்கள் அடிப்படை மூச்சுப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமங்கள் மற்றும் அடிப்படை யோகா பயிற்சியுடன் தொடங்குகிறோம்.
சில சமயங்களில், தனது பணி அட்டவணையின் காரணமாக, மாலையில் உடற்பயிற்சி செய்ய விரும்புவார். ஆனாலும் அவர் உடற்பயிற்சி செய்ய வேண்டாம், அது உங்களுக்கு உகந்ததல்ல" என்று அவரிடம் சொல்ல வேண்டிய நேரங்கள் இருந்தன. முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் காலை, மதியம் அல்லது மாலை இடையில் கூட நேரம் எடுத்து யோகா செய்கிறார். ஏனென்றால் அது முக்கியம் என்று அவருக்குத் தெரியும்.” என்று தெரிவித்தார்.
அமிதாப் பச்சனிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட விருந்தா, "ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றை நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.நான் அவருக்கு பயிற்சி அளிக்கும் போது, நாங்கள் காலை 6 மணிக்குத் தொடங்குவோம். ஆனால் ஒருநாள் கூட அவர் தாமதமாக வந்ததில்லை. ஒருவேளை என்றாவது சிறிது தாமதமானால், அவர் போன் செய்து, 'கொஞ்சம் தாமதமாக வருகிறேன், அதற்காக வருந்துகிறேன்' என்று கூறுவார். வேறும் 5 அல்லது 7 நிமிடங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. எனவே நேரத்தின் மதிப்பை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.” என்று தெரிவித்தார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமாவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியான பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அமிதாப் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.படம் பார்த்த ரசிகர்கள் இதனால் அமிதாப் ஒரு லெஜெண்ட் என்று அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். தனது மகன் அபிஷேக் பச்சனுடன் ஜூன் 30-ம் தேதி அவர் முதன்முறையாக கல்கி 2898 படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.