- Home
- Gallery
- Kajal new: கணவருடன் குடும்ப குத்து விளக்காக காட்சி தரும் காஜல் அகர்வால்!! சிவப்பு நிற சேலையில் வேற லெவல் லுக்!
Kajal new: கணவருடன் குடும்ப குத்து விளக்காக காட்சி தரும் காஜல் அகர்வால்!! சிவப்பு நிற சேலையில் வேற லெவல் லுக்!
Kajal Aggarwal latest photos: காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன், நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
தமிழில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தவர்.
30 வயதை கடந்த நடிகையாக இருந்தாலும், இவரின் அழகு மற்றும் கவர்ச்சி காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை இவர் கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கமிட்டான சில படங்களில் நடித்துவந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.
இந்நிலையில், கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் காஜல், வழக்கம்போல் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
மேலும், குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது சிகப்பு நிற சேலையில் தன்னுடைய கணவருடன் இருக்கும் போது இடுப்பு தெரிய இவர் போஸ் கொடுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.