- Home
- Gallery
- Kajal Aggarwal: என்னை ராணியாக உணர வைத்தனர்! 39-ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்!
Kajal Aggarwal: என்னை ராணியாக உணர வைத்தனர்! 39-ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்!
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவர், மகன், மற்றும் நண்பர்களுடன் எடுத்து கொண்ட ஸ்பெஷல் தருணத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal Birthday Special Photos
தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால், மும்பையை சேர்ந்தவர் என்பதால் இவர் அறிமுகமானது பாலிவுட் திரைப்படத்தில் தான். ஆனால் கதாநாயகிக்கு தங்கையாக நடிக்கும் கதாப்பாத்திரம் தான் கிடைத்தது.
Kajal Aggarwal Birthday Special Photos
அடுத்தடுத்து இதோ போன்ற பட வாய்ப்புகளே கிடைத்து வந்ததால் 3 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல், இருந்த காஜல் அகர்வால் அப்படியே தென்னிந்திய திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். அப்போது தான் தெலுங்கில் இயக்குனர் தேஜ் இயக்கிய லட்சுமி கல்யாணம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Kajal Aggarwal Birthday Special Photos
தெலுங்கில் கொஞ்சம் கொஞ்சமாக பிக்காப்பாகி வளரும் இடம் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த காஜல் அகர்வாலுக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
Kajal Aggarwal Birthday Special Photos
அந்த வகையில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த பழனி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்த அவருக்கு ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Kajal Aggarwal Birthday Special Photos
தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளும் படு பிஸியான காஜல்... தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'நான் மகான் அல்ல', சூர்யாவுடன் 'மாற்றான்', விஜய்க்கு ஜோடியாக 'துப்பாக்கி' ,'ஜில்லா', அஜித்துடன் 'விவேகம்', தனுஷுக்கு ஜோடியாக 'மாரி' தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு மட்டுமே அதிகம் ஜோடி போட்டார்.
Kajal Aggarwal Birthday Special Photos
35 வயதை கடந்த பின்னரும், முன்னனி நடிகையாக வலம் வந்த காஜல்... தன்னுடைய நீண்ட நாள் காதலரான கவுதம் கிச்சிலுவை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2022ம் ஆண்டு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தை பிறந்தது.
Kajal Aggarwal Birthday Special Photos
தற்போது கணவர் - குழந்தை என மிகவும் சந்தோஷமாக இருக்கும் கஜால்... திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், குடும்பத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
Kajal Aggarwal Birthday Special Photos
அந்த வகையில் தற்போது தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தையுடன் கொண்டாடி மகிழ்ந்த கஜோல், மறக்க முடியாத தருணங்களை நினைவு கூர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Kajal Aggarwal Birthday Special Photos
இதுகுறித்து காஜல் அகர்வால் போட்டுள்ள பதிவில், "என் அன்பான குடும்பம், நண்பர்கள் மற்றும் அற்புதமான ரசிகர்கள் என உங்களின் அனைவரின் வாழ்த்துக்களுக்கும், அதீத அன்புக்கும் மிக்க நன்றி. என் இதயம் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இது எனக்கு ஒரு அற்புதமான பிறந்த நாளாக இருந்தது! என்னுடன் இல்லாத என் அன்பானவரை தவறவிட்டேன், என் வாழ்க்கையை மிகவும் அழியாத வகையில் தொட்ட அனைவரையும் பற்றி நினைத்தேன்! கிச்சுலுவும், நீலும் என்னை ஒரு ராணியாக உணர வைத்தனர் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.