- Home
- Gallery
- KRK box office: வசூலில் சொல்லி அடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம்..3 நாள் முடிவில் பிளாக் பஸ்டர் ஹிட்?
KRK box office: வசூலில் சொல்லி அடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம்..3 நாள் முடிவில் பிளாக் பஸ்டர் ஹிட்?
KRK box office: காத்து வாக்குல ரெண்டு காதல், படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், அதன் வசூலும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

kathuvakkula rendu kadhal
‘நானும் ரவுடி தான்' படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து தான சேர்ந்த கூட்டத்தை இயக்கினார். இதையடுத்து மீண்டும் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார்.
kathuvakkula rendu kadhal
கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில், இவர்களுடன் சமந்தாவும் இணையத்துள்ளார். இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது சொந்த தாயரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார்.
kathuvakkula rendu kadhal
முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக
விக்னேஷ் சிவன் நடித்துள்ளார்.
KRK
மொத்தத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் படம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
KRK
இருப்பினும், ஒரு தரப்பினரிடையே படம் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில், தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ள காத்து வாக்குல இரண்டு படத்தின் தகவல் மற்றும் வசூல் விவரம் வெளிவந்த வண்ணம் உள்ளது.
KRK
அந்த வகையில், இந்த திரைப்படத்தின் 3 நாள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம், இப்படம் மூன்றே தமிழ்நாட்டில் மட்டும் ரூ 14.5 கோடி காலெக்ஷன் செய்திருக்கிறது.
KRK
மேலும் இந்த படம் சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் ரூ 1.7 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.