- Home
- Gallery
- Nagarjuna Warring: சிரஞ்சீவியை மேடையில் அவமதித்த ஜூனியர் NTR! வார்னிங் கொடுத்த நாகார்ஜுனா! என்ன நடந்தது?
Nagarjuna Warring: சிரஞ்சீவியை மேடையில் அவமதித்த ஜூனியர் NTR! வார்னிங் கொடுத்த நாகார்ஜுனா! என்ன நடந்தது?
ஒருமுறை சிரஞ்சீவி பற்றி நேரடி நிகழ்சியில் ஜூனியர் என்டிஆரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது, அவரை அவமதிக்கும் வகையில் பதிலளித்ததற்காக, நாகர்ஜுனா எச்சரித்த விஷயம் மீண்டும் தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்டிஆர், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'நின்னு நிதானடி' என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடித்த போது இவருக்கு 18 வயது கூட நிறைவடையவில்லை. பின்னர் அதே ஆண்டு Jr NTR நடித்த ஸ்டூடன்ட் நம்பர் ஒன் மற்றும் சுப்பு ஆகிய படங்கள் வெளியாகி ஹர்டிக் வெற்றி பெற்றது.
குறிப்பாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன், பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சுப்பு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாகவும், மியூசிக்கல் ஹிட்டாகவும் அமைந்தது. இப்படத்தில் தன்னுடைய அபார நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்தார் ஜூனியர் NTR.
அதே போல் 2002ல் வெளியான ஆதி திரைப்படத்தின் மூலம் அடுத்த வெற்றியை கண்டார். அறிமுகமான 2 வருடத்திலேயே அடுத்தடுத்த வெற்றி மூலம், இருபது வயதுக்கு முன்பே மாஸ் ஹீரோ இமேஜ் பெற்றார். சிம்ஹாத்ரி திரைப்படம் என்டிஆரை முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைத்தது. இந்தப் படம் வெளியான பிறகு என்டிஆர் அளித்த பேட்டி தான் சர்ச்சையான நிலையில் அதற்காக நாகர்ஜுனா வார்னிங்கும் கொடுத்துள்ளார்.
அதாவது இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நேரடி நிகழ்சியில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆரிடம், தொகுப்பாளர் சிரஞ்சீவி பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். டாப் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி பற்றி உங்கள் கருத்து என்ன.. எனகேட்டதற்கு , ஜூனியர் என்.டி.ஆர் எனக்கு தெரிந்த மிகப்பெரிய நட்சத்திரம் என் தாத்தா தான் என சிரஞ்சீவியை அவமதிப்பது போல் பேசியுள்ளார்.
இது குறித்த அறிந்த நாகர்ஜுனா உடனே ஜூனியர் என்டிஆரை அழைத்து, நீங்கள் எதை பற்றி பேசுகிறீர்கள், யாரை பற்றி பேசுகிறீர்கள் என்பதை யோசித்து பேசுங்கள். உங்களை விட வயதில் மூத்தவர்களைப் பற்றி கவனமாக பேசுபடி எச்சரித்தாராம். அந்த வயதில் என்டிஆருக்கு தான் செய்த தவறு புரியவில்லை என்றாலும், பின்னர் அவர் மனம் வரிந்து, தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சிம்ஹாத்ரி படத்திற்கு பின்னர் அடுத்தடுத்த தோல்வி படங்களையும் சந்திக்க துவங்கினார் என்டிஆர். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஆந்திராவாலா பெரும் தோல்வியை தழுவியது. மேலும் சம்பா, நா அல்லுடு, நரசிம்ஹுடு, அசோக், ராக்கி... என தொடர்ந்து 5 படங்கள் கிளீன் போல்ட் ஆன நிலையில், ராஜமௌலி, யமதொங்கா படம் தான் மீண்டும் என்டிஆருக்கு பிரேக் கொடுத்தது.
NTR
குறிப்பிட்ட வயதை எட்டிய பின்னர் தான், என்டிஆர்-க்கு பெரிய முதிர்ச்சி வந்தது. அவர் பேச்சு மாறியது. என்டிடிஆரின் வார்த்தைகள் முதிர்ச்சியடைய துவங்கின. இப்போதெல்லாம் எந்த சர்ச்சையில் சிக்காமல், அர்த்தமுள்ளதாக பேசுகிறார் என்டிஆர். ஒரு வேலை நாகர்ஜுனா அன்று கண்டிக்க தவறி இருந்தால்... இன்று இந்த அளவிலான மாற்றம் வந்திருக்குமோ என்பது சந்தேகமே!