- Home
- Gallery
- Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்...
Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.. மிதுனம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்...
Horoscope Today- Indriya Rasipalan june 19 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். சிலருக்கு ஆபத்து தேடி வரும். அப்படியாக, இன்றைய 12 ராசிகளின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கும் கருத்து மோதல்கள் வலுவாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள்சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும். ஆரோக்கியம் மேம்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து மோதல்கள் இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் நீங்கள் மூக்கை நுழைத்து விட்டு பிறகு வருத்தப்பட வேண்டாம். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கூடும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போகிறீர்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாகும். நீங்கள் முழு ஓய்வு எடுத்துக் கொள்ளக் கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பண ரீதியான விஷயத்தில் மூன்றாம் மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும். நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலை முடிய விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உறவினர்களின் ஆதரவு பெருகும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
தனுசு:
தனுசு பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளைசந்திக்க நேரிடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் மேலோங்கி காணப்படும். புதிய சேர்க்கை உங்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்க இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படும் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தொடர் தோல்விகள் ஏற்படும், வேலையில் கூடுதல் ஒத்துழைப்பை கொடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகம் உள்ள அமைப்பு என்பதால் நீங்கள் எடுத்ததெல்லாம் வெற்றியாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமைக்கு வலு சேர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அங்கு உள்ள பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட பயணங்கள் ஏற்படும்.
Jothidar Chirag Daruwalla- Astrology Prediction
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் குவிய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற சிந்தனைகளை உண்டாக்கும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து கொள்ளுங்கள். எதிலும், எச்சரிக்கை அவசியம்.