சவுதியில் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அழைப்பு
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு. முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் பல்வேறு வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist) அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் முனைவர். சி.ந. மகேஸ்வரன் வெளியிட்டுள்ள தகவலில், சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா மருத்துவமனையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் ஹைதராபாத்ல் நடைபெறவுள்ளது. பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Teachers Day 2024 : ஆசிரியர் தின வாழ்த்துக்கள், whatsapp ஸ்டேட்டஸ்கள் மற்றும் பல..
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக (What's App Number: 9566239685/6379179200) (044-22505886/044-22502267) தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ. ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வமான வலைதளமான WWW.Omcmanpower.tn.gov.in ல் நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.