கோலிவுட்.. 4 மெகா ஹிட் படங்கள் - அதை மிஸ் பண்ண 4 சூப்பர் ஹிட் நடிகர்கள்!
Kollywood Movies : இன்று உச்சத்தில் இருக்கும் கோலிவுட் நடிகர்கள் கூட, சில நேரங்களில் மெகா ஹிட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ள சம்பவங்கள் நடந்துள்ளது.
Jeans movie
அந்த வகையில் கடந்த 1998ம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் "ஜீன்ஸ்". ஒரே பாடலில் 7 உலக அதிசயங்களை நம் கண் முன் கொண்டு வந்து அசத்திய ஒரு திரைப்படம் அது. நடிகர் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்த அந்த திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த கதையை தான் நடிகர் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதியதாக அண்மையில் பங்கேற்ற ஒரு பேட்டியில் இயக்குனர் சங்கர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Kaithi movie
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "கைதி" என்கின்ற திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மாபெரும் இயக்குனரை கொடுக்கப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது. அப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கான வரவேற்பு தலைகீழாக மாறியது. இன்று உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று முன்னணி நடிகர்களை அவர் இயக்கி வருகிறார்.
ஆனால் உண்மையில் கைதி திரைப்படத்தில் நடிக்க முதலில் அவர் அணுகியது நடிகர் விஜய் சேதுபதியைத் தான். அப்போது அவர் பிஸியாக இருந்த காரணத்தினால் அவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
Maharaja movie
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியாகி மெகா ஹிட்டாகி உள்ள திரைப்படம் தான் மகாராஜா. பிரபல நடிகர் சிங்கம்புலியை யாரும் நினைத்துக் கூட பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஒரு இயக்குனராக வெற்றி கண்டுள்ளார் நித்திலன் என்றால் அது மிகையல்ல.
ஆனால் இந்த திரைப்படத்தில் நடிக்க நித்திலன் முதலில் அணுகியது நடிகர் விஜய் ஆண்டனியை தான். ஆனால் அப்போது அவரும் ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் அப்படம் விஜய் சேதுபதிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Enthiran
சங்கர் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எந்திரன். உலக அளவில் மெகாஹிட்டானது அந்த படம். ஆனால் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்த திரைப்படத்திற்கான போட்டோ சூட் மற்றும் பிற பணிகளை இயக்குனர் சங்கர் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.