சந்திரமுகி 2 வசூலில் பாதி கூட இல்லையா! முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கிய இறைவன் - வசூல் நிலவரம் இதோ
அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்துள்ள இறைவன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
Iraivan movie poster
காதல் தேசம், காதலர் தினம் போன்ற படங்களில் இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஹமத். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய என்றென்றும் புன்னகை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படத்தை இயக்கி இருந்தார் அஹமத்.
jayam ravi, nayanthara
மனிதன் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு பின் அவரின் அடுத்த படமான இறைவன் வெளியாகி உள்ளது. இறைவன் படத்தின் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் நரேன், ராகுல் போஸ், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Iraivan movie collection
சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இறைவன் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் வருவதால் இதற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இப்படத்தை தயவு செய்து குழந்தைகளுடன் பார்த்துவிடாதீர்கள் என்று ரிலீசுக்கு முன்பே நடிகர் ஜெயம் ரவி கூறி இருந்தார். இறைவன் பட டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருந்தது.
Iraivan box office collection
அந்த எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஏண்டா படத்துக்கு வந்தோம் என புலம்ப வைத்துள்ளது இறைவன் படக்குழு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுத்தமாக பூர்த்தி செய்யாத இப்படம் முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் பயங்கர அடி வாங்கி உள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.2.5 முதல் ரூ.3 கோடி வரை மட்டுமே வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு போட்டியாக சந்திரமுகி 2 திரைப்படம் முதல் நாளில் ரூ.7.5 கோடி வசூலித்துள்ளது. அதோடு ஒப்பிட்டு பார்த்தால் இறைவன் படம் பாதிகூட வசூலிக்கவில்லை.
இதையும் படியுங்கள்...Iraivan movie review : ஜெயம் ரவி வென்றாரா? வெறுப்பேற்றினாரா? இறைவன் படத்தின் விமர்சனம் இதோ