ஷாரூக்கின் ஜவான்.. நயனின் காட்சிகளுக்கு கத்திரி போடப்பட்டதா? - அட்லீ மேல் கடுப்பில் சுத்தும் Lady Super Star!
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பாலிவுட்டில் அண்மையில் தனது தடத்தை ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பதித்தார். அட்டகாசமான அதிரடி நாயகியாக நயன்தாரா, நர்மதா ராய் என்ற வலிமைமிக்க கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
Jawan
ஆனால், ஜவான் திரைப்படம் மூலம், அப்படத்தின் இயக்குனர் அட்லீ மீது நயன்தாரா சற்று கோவத்தில் உள்ளதாக செய்திகள் தீயாக பரவி வருகின்றது. பிரபல இந்திய நாளேடுகள் சில வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜவான் படத்தில் நயன்தாராவின் காட்சிகள் சிலவற்றுக்கு கத்திரிப்போடப்படுத்தலாக கூறப்படுகிறது. அதாவது நயன்தாரா நடித்த சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கீர்த்தி சுரேஷுக்கு போட்டியாக செல்வராகவன் படத்தில் அறிமுகமாகும் வாரிசு நடிகை!! ஆச்சர்ய தகவல்!!
Atlee Kumar and Shah Ruk Khan
அதுமட்டுமல்லலால், படத்தின் மற்றொரு நாயகியான தீபிகாவின் படுகோனேவின் கதாபாத்திரம் உயர்த்தப்பட்டு, நயன்தாராவின் பகுதிகள் கணிசமாக ஒதுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் உலகின் முன்னணி நடிகையான தீபிகா, ஜவான் படத்தில் ஷாரூக்கின் மனைவியாக "சிறப்பு தோற்றத்தில்" நடித்திருந்தார்.
Nayanthara
ஆனால் "அது ஒரு கேமியோ ரோல் போல அல்ல" என்றும், படம் நயன்தாரா - ஷாரூக் படம் போல இல்லாமல், தீபிகா - ஷாரூக் படம் போல காட்சியளிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆகவே தமிழகத்தில் டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா, இப்பொது இயக்குனர் அட்லீ மீது அற்று கோபமாக இருந்து வருகின்றார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
Lady Super Star Nayanthara
இதனால் தான், நயன்தாரா, ஜவான் பட ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்ளாததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாலிவுட் உலகின்பாஷாவாக பார்க்கப்படும் ஷாரூக் கான், படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக செல்லும் இடமெல்லாம், நயன்தாராவையும், அவருடைய நடிப்பையும் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Leo Poster: வெறித்தனமான கோவத்தை வெளிப்படுத்தும் விஜய்..! 'லியோ' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது..!