கட்டிப்புட்ரா... பொத்தி பொத்தி வளர்த்த மகனை முதன்முறையாக வெளியுலகுக்கு காட்டிய அட்லீ - வைரலாகும் கியூட் போட்டோ
ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குனர் அட்லீயின் மகன் மீரின் புகைப்படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Atlee
தமிழ் சினிமாவில் வரிசையாக நான்கு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் அட்லீ. இவர் தற்போது ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஷாருக்கானை நாயகனாக நடிக்க வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ஜவான் படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பால் இயக்குனர் அட்லீ செம்ம குஷியில் உள்ளார்.
Priya atlee
இயக்குனர் அட்லீ கடந்த 2014-ம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 9 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தனர். இருப்பினும் மகனை இதுவரை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்தே வைத்திருந்தார் அட்லீ.
இதையும் படியுங்கள்... 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கும் புதிய சீரியல் பூஜை போட்டாச்சு! ஹீரோ விஜய் டிவி பிரபலமா?
Atlee son meer
இந்நிலையில், ஜவான் படம் ரிலீஸ் ஆன கையோடு, அட்லீயின் மகன் மீரின் புகைப்படமும் முதன்முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் மகன் மீர் தன் மீது நிம்மதியாக தூங்கும்போது உற்சாகம் பொங்க சிரித்தபடி செல்பி எடுத்திருக்கிறார் அட்லீ. இதைப்பார்த்த ரசிகர்கள் மகனை தூங்க வைத்த சந்தோஷத்தில் தான் இப்படி ஒரு செல்பியை அட்லீ எடுத்துள்ளதாக கலாய்த்து வருகின்றனர்.
Atlee family
சிலரோ தூங்கும் போது மீர் செம்ம கியூட்டாக இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். குழந்தை பிறந்த சமயத்தில் ஜவான் பட பணிகளில் பிசியாக இருந்ததால் மகன் மீர் உடன் அதிகளவு நேரம் செலவிட முடியாமல் இருந்த அட்லீ, அடுத்த 4 மாதத்துக்கு எந்த பட வேலைகளையும் தொடாமல் முழுக்க முழுக்க மகனுக்காகவே கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... களைகட்டிய அனிதா விஜயகுமார் பிறந்தநாள் கொண்டாட்டம்! வாழ்த்த வந்த சினிமா பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!