- Home
- Gallery
- காயம் காரணமாக விலகும் ரோகித் சர்மா? பும்ரா டாஸ் போடுவதை பார்க்க காத்திருக்க முடியாது- சஞ்சனா கணேசன்!
காயம் காரணமாக விலகும் ரோகித் சர்மா? பும்ரா டாஸ் போடுவதை பார்க்க காத்திருக்க முடியாது- சஞ்சனா கணேசன்!
ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

IND vs PAK, T20 World Cup 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்பட 20 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
IND vs PAK, T20 World Cup 2024
இதில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற 8ஆவது போட்டியில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் போது ரோகித் சர்மாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.
IND vs PAK, T20 World Cup 2024
விராட் கோலி ஒரு ரன்னில் வெளியேற, ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக இந்தியா 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் தோள்பட்டை காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
IND vs PAK, T20 World Cup 2024
தோள்பட்டையில் வலி இருந்தால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் தான், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதில் பும்ரா டாஸ் போடுவதை பார்க்க என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
IND vs PAK, T20 World Cup 2024
அதாவது, நாளை நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை என்றால் அவருக்குப் பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கும் போது, அவர் தான் கேப்டனாக செயல்படுவார்.
IND vs PAK, T20 World Cup 2024
ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டால், பும்ரா துணை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரோகித் சர்மா வலைபயிற்சியில் பேட்டிங் செய்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.