- Home
- Gallery
- சுமார் 120 கோடி சொத்து.. மாஸ் காட்டும் தென்னிந்தியாவின் பணக்கார வில்லன் நடிகர் - யார் தெரியுமா?
சுமார் 120 கோடி சொத்து.. மாஸ் காட்டும் தென்னிந்தியாவின் பணக்கார வில்லன் நடிகர் - யார் தெரியுமா?
Richest South Indian Villain : திரைப்படத்தில் ஹீரோவின் மதிப்பே அவர் எதிர்கொள்ளும் வில்லனை பொறுத்து தான் அமையும். அந்த வகையில் பல சூப்பர் ஹிட் வில்லன்கள் இந்திய திரையுலகில் உள்ளனர்.

prakash raj
தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வில்லன் நடிகர் என்று சொன்னாலே சட்டென்று நமக்கு நினைவில் வருவது பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட வெகு சில வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.
Jagapathi Babu
ஆனால் உண்மையில் தென்னிந்திய அளவில், மிகவும் பணக்காரராக திகழ்ந்துவரும் ஒரு வில்லன் நடிகன் என்றால் அது ஜெகபதி பாபு தான். ஆந்திராவில் பிறந்து குழந்தை நட்சத்திரமாகவே திரையுலகில் களம் இறங்கி இன்று தமிழ், தெலுங்கு, மலையலாம் மற்றும் கன்னடம் ஆகிய பல திரையுலகிலும் மிகப்பெரிய வில்லன் நடிகராக பயணித்து வருகின்றார்.
Actor Jagapathi Babu
62 வயது நிரம்பிய நடிகர் ஜெகபதி பாபு கடந்த 2006ம் ஆண்டு தமிழில், அர்ஜுன் நடிப்பில் வெளியான "மதராசி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் வில்லனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக "தாண்டவம்", "லிங்கா", "கத்தி சண்டை", "பைரவா" மற்றும் "விஸ்வாசம்" போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
Jagapathi
ஒரு திரைப்படத்திற்கு சுமார் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஜெகபதி பாபுவின் ஆண்டு வருமானம் சுமார் 27 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இப்போது வரை அவரிடம் சுமார் 120 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாகவும், பல சொகுசு காரர்கள் அவரிடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.