இமயத்தையும் விட்டுவைக்காத வெளிநாட்டு மோகம் - பாரதிராஜா டச்சில் வெளிநாட்டில் உருவான 2 படங்கள் என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகில் மேற்கத்திய கலாச்சாரம் சற்று உயர்ந்திருந்த காலகட்டத்தில், கிராமத்தின் மைந்தனாக களமிறங்கி, மாபெரும் இயக்குனராக உருவெடுத்து பல மண்வாசனை நிறைந்த சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா.
16 Vayathinile
கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார். அவர் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதையும் வென்றார். தொடர்ச்சியாக கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என்று கிராமத்து பணியில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்
Iyakkunar Imayam
82 வயதில் இப்பொதும் நல்ல பல படங்களில் நடித்து வருகின்றார் பாரதிராஜா, தனது வாழ்நாளில் பல படங்களை அவர் இயக்கியிருந்தாலும் பெரிய அளவில் இவர் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்போ, அல்லது வெளிநாட்டில் நடப்பது போன்ற கதை அம்சத்தையோ தேர்வு செய்ததில்லை.
Kangalal Kaithu Sei
ஆனால் கடந்த 2004ம் ஆண்டு ப்ரியாமணி நடிப்பில் வெளியான கண்களால் கைது செய் என்று படம் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படமாக, வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது, கிராம பணியில் மட்டுமல்ல, பாரதிராஜா வெளிநாட்டு கதைகளிலும் வல்லவர் என்று இந்த படம் நிரூபித்தது.
Bommalattam
அதேபோல 2008ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான, வித்யாசமான கதை அம்சம் கொண்ட பொம்மலாட்டம் என்ற திரைப்படம் வெளிநாட்டில் நடக்கும் கதை அம்சம் கொண்ட படமாக இருந்தது. இதுவே அவர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக வெளியான வெளிநாட்டு திரைப்படம்.
தளபதியை தொடர்ந்து அவரின் தந்தை எஸ்.ஏ.சி-யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்! வைரலாகும் புகைப்படம்.!