MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை மாற்றம்.! புதிய அமைச்சர்கள் யார்.? நீக்கப்படும் அமைச்சர்கள் யார்.?

இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை மாற்றம்.! புதிய அமைச்சர்கள் யார்.? நீக்கப்படும் அமைச்சர்கள் யார்.?

தமிழகத்தில் திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்திற்கு முன்னதாக, துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் உள்ளிட்ட பல அதிரடி மாற்றங்கள் அமைச்சரவையில் நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Aug 22 2024, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

புதிய திட்டங்களோடு திமுக அரசு

தமிழகத்தில்  திமுக ஆட்சி அமைத்து  3ஆண்டுகள் முடிவடைந்து 4வது ஆண்டை நோக்கி செல்கிறது. இந்த நிலையில் பல்வேறு மக்கள் நில திட்டங்களால் மக்களிடம் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக விடியல் திட்டம், மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களால்  மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகள் முதல் கல்லூரி மாணவ,மாணவிகள் வரை கிடைக்கிறது. இந்தநிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தமிழகத்திற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்

அந்த வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என தொடர் நிகழ்வுகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்ட்டுள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். 17 நாட்கள் பயணமாக இந்த பயணம் அமையவுள்ளது. தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணம் அமையவுள்ளது. முக்கிய தொழில் அதிபர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

35

அமைச்சரவையில் இன்று மாற்றம்

இதனிடையே முதலமைச்சர் வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்லும் முன்பாக தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த  3ஆண்டில் அமைச்சர் நாசர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சராக உதயநிதி மற்றும் டிஆர்பி ராஜா இடம்பெற்றனர். ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது துணை முதலைமைச்சராக உதயநிதியும் நியமிக்கப்படவுள்ளார்.

45

யாருக்கு வாய்ப்பு.?

இதைபோல திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன், சேலம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

55

நீக்கப்படும் அமைச்சர்கள் யார்.?

அதே நேரத்தில் தற்போதைய தமிழக அமைச்சரவையில் உள்ள பாலவளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காதர் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை தினம் பதவியேற்பு நடைபெற இருப்பதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தலைமைசெயலக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
திமுக
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved