- Home
- Gallery
- New Ration Card : புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்.? காத்திருக்கும் 3 லட்சம் பேர் - வெளியான தகவல்
New Ration Card : புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்.? காத்திருக்கும் 3 லட்சம் பேர் - வெளியான தகவல்
புதிய ரேஷன் கார்டு பெற 2.80 லட்சம் விண்ணப்பிதிருந்த நிலையில், விண்ணபங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய குடும்ப அட்டை எப்போது கிடைக்கும்.?
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த விலையில் உணவு பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.
மகளிர் உதவி தொகை
இதனால் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெற முடியாமல் உள்ளனர். இதனை கருதி புதிய ரேஷன் கார்டு வழங்கும் படி தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. புதிய ரேஷன் கார்டு நிலை அறிய தினந்தோறும் உணவு பொருள் வழங்கும் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அழைந்து வருகின்றனர்.
Vegetables Price : தக்காளி விலை கூடியதா ? குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
2லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பம்
இந்தநிலையலில் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 உள்ளது.
பகுதிநேர கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 954ஆக உள்ளது. இதனிடையே புதிய ரேஷன்கார்டு கோரி 2லட்சம் 81 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களின் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் மாதம் முதல் குடும்ப அட்டை
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் புதிய அட்டை வழங்கும் பணி தொடங்கவுள்ளது. மே 2021 முதல் இதுவரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் குடும்ப அட்டை மாற்றம், புதிய அட்டைக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதை குறைக்கும் வகையில் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ration shop
விலை அதிகரிக்க திட்டம்
இதனிடையே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், சோப்பு, முகத்துக்கு போடும் கிரிம் அறிமுகப்படுத்த திட்டம். நிதி நெருக்கடியால் பருப்பு மற்றும் பாமாயில் விலையை ரேஷன் கடைகளில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.