School Holiday : தமிழகத்தில் நாளை பள்ளிக்கு விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு !
ஆகஸ்ட் மாதத்தில் ஏற்கனவே அதிக விடுமுறைகள் இருந்த நிலையில், பள்ளிகள் இந்த மாதத்தின் 5வது சனிக்கிழமை செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
School Holiday in August
ஆகஸ்ட் மாதம் கொண்டாட்டம்
பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மகிழ்ச்சியான மாதமாகவே அமைந்தது. குறிப்பாக சுதந்திர தினம் வியாழக்கிழமை வந்தது. அதனையொட்டி வெள்ளிக்கிழமை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை விடப்பட்டதால் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினமாக அமைந்தது. இதனையடுத்து மீண்டும் கடந்த வாரம் சனி, ஞாயிறு 24, 25 மற்றும் 26 கிருஷ்ண ஜெயந்தி ஆகிய 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனால் அதிக விடுமுறை கிடைத்த மாதமாக ஆகஸ்ட் மாதம் இருந்தது. இது மட்டுமில்லாமல் பல மாவட்டங்களில் உள்ளூர் விஷேசங்களையொட்டி விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
School Holiday for tomorrow
சனிக்கிழமைகளிலும் பள்ளி செயல்படும்
இந்தநிலையில் வழக்கமாக ஒரு கல்வியாண்டில் 210 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் இம்முறை 220 நாட்களாக அதிகரிக்கரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமையான 10, 24 ஆகிய தேதிகளுடன் சேர்த்து மொத்தம் 22 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல செப்டம்பர் மாதம் சனிக்கிழமையான 14, 21 ஆகிய 2 நாட்கள் சேர்த்து 21 நாட்கள் வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டது.
Tommorrow School Holiday
5வது சனிக்கிழமை பள்ளிகள் செயல்படுமா.?
இந்த உத்தரவிற்கு ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும் எனவும் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்து. இதனையேற்ற பள்ளிக்கல்வித்துறை சனிக்கிழமை விடுமுறை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இந்த ஆகஸ்ட் மாதம் 20 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டது. இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தின் 5வது சனிக்கிழமையான நாளை விடுமுறை விடப்படுமா.? அல்லது பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முழு நேரம் பள்ளிகள் செயல்படும்
இந்தநிலையில் இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் ஆகஸ்ட் மாதத்தின் 5வது சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) வேலைநாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் பள்ளிகள் முழு நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த நாட்கள் தெரியுமா?