- Home
- Gallery
- Anant Ambani Haldi : ஹார்ட் எம்ப்ராய்டரி லெஹெங்காவில் அனைவரையும் ஈர்த்த இஷா அம்பானி.. அதன் விலை இத்தனை லட்சமா?
Anant Ambani Haldi : ஹார்ட் எம்ப்ராய்டரி லெஹெங்காவில் அனைவரையும் ஈர்த்த இஷா அம்பானி.. அதன் விலை இத்தனை லட்சமா?
ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் விழாக்களில் தனது தனித்துவமான ஆடை மூலம் அம்பானி மகள் இஷா அமபானி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த லெஹங்காவின் விலை எவ்வளவு தெரியுமா?

Isha Ambani at Anant Haldi Function
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் களை காட்டி உள்ளது. சங்கீத், ஹல்தி விழாக்களில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த விழாக்களை மேலும் சிறப்பாக்கி வருகின்றனர்.
Isha Ambani at Anant Haldi Function
ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் விழாக்களில் தனது தனித்துவமான ஆடை மூலம் அம்பானி மகள் இஷா அமபானி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். நேற்றிரவு, அனந்த் - ராதிகாவின் ஹல்தி விழாவில் தனிப்பயனாக்கப்பட்ட ஹார்ட் எம்ப்ராய்டரி லெஹங்காவை அவர் அணிந்திருந்தார்.
Isha Ambani at Anant Haldi Function
இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், வண்ணமயமான குஞ்சங்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்கள், ஹார்ட் வடிவிலான எம்பிராய்டரி டிசைன்களுடன் கொண்ட லெஹங்காவை இஷா அணிந்திருந்தார்.
Isha Ambani
அழகுபடுத்தப்பட்ட வளையல்கள், காதணிகள் மற்றும் மோதிரம் ஆகியவற்றையும் இஷா அணிந்திருந்தார். இஷாவின் வண்ணமயமான ஆடை அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
Isha Ambani Lehanga Price
ஹல்தி கொண்டாட்டங்களுக்காக இஷா தனிப்பயனாக்கப்பட்ட லெஹெங்கா செட்டை இஷா அணிந்திருந்தாலும், லெஹங்கா செட்டின் பதிப்பு தோரானி இணையதளத்தில் கிடைக்கிறது. இது தில் ரங் ஜீவா லெஹங்கா செட் என்று அழைக்கப்படுகிறது. இந்த லெஹங்கா செட்டின் மதிப்பு ரூ. 1,35,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Isha Ambani Lehanga Anant Haldi
நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் ஒரே மகள் தான் இஷா அம்பானி. அவருக்கு ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி என்ற இரு சகோதரர்கள் இருக்கின்றனர். இஷா அம்பானி பிரபல தொழிலதிபர் ஆனந்த் பிரமாலை மணந்தார். இந்த ஜோடி டிசம்பர் 12, 2018 அன்று திருமணம் செய்து கொண்டது. இந்த தம்பதிக்கு கடந்த 2022 நவம்பர் 22-ம் தேதி தங்கள் ஆதியசக்தி மற்றும் கிருஷ்ணா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
Isha Ambani
இஷாவின் இளைய சகோதரர் ஆனந்த் அம்பானி, வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அம்பானி குடும்பம் இந்த ஜோடியின் இணைவைக் கொண்டாடும் வகையில் பல பிரமாண்டமான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை நடத்தியது. ஜூலை 12-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழா ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..