தமிழர் பாரம்பரிய முறைப்படி நீண்ட ஜடை பின்னி அழகுப் பதுமையாக வந்த இஷா அம்பானி!
இஷா அம்பானி தனது சகோதரர் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்வுகளில் விதவிதமான டிரெஸ் மற்றும் அலங்காரம் அணிந்துகொண்டு வலம் வருகிறார்.

தமிழர்களின் ஜடை பின்னல்
அனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் விழாக்களில் தனது தனித்துவமான ஆடை மூலம் அம்பானி மகள் இஷா அமபானி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இளஞ்சிவப்பு நிற பார்டர் மற்றும் கோல்டன் பிளவுஸ் கொண்ட லெஹங்கா அணிந்திருந்த இஷா அம்பானி, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி அவர் பின்னியிருந்த ஜடை அலங்காரம் மேலும் மெருகேற்றி அழகாக காண்பித்தது.
பெண்மையை விளக்கும் ஜடை பின்னல்!
தமிழர் பாரம்பரிய ஜடை பின்னல், 3 பகுதிகளைக் கொண்டது. இது வாழ்க்கையின் சுழற்ச்சிகைள குறிக்கிறது. பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதி மட்டுமே புலப்படுகின்றன. ஜடை பின்னலின்
வலது- பிறந்த வீடு, இடது-புகுந்த வீடு, நடுப்பகுதி-பெண் என எடுத்துக்கொண்டால், தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.
Anant Ambani Haldi : ஹார்ட் எம்ப்ராய்டரி லெஹெங்காவில் அனைவரையும் ஈர்த்த இஷா அம்பானி.. அதன் விலை இத்தனை லட்சமா?
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமண கொண்டாட்டம்
இஷாவின் இளைய சகோதரர் அனந்த் அம்பானி, வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அம்பானி குடும்பம் இந்த ஜோடியின் இணைவைக் கொண்டாடும் வகையில் பல பிரமாண்டமான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை நடத்தியது. ஜூலை 12-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழா ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..