MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ilaiyaraaja Birthday : அன்னக்கிளி தந்த அற்புத கலைஞன்! இசையின் ராஜா... இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்

Ilaiyaraaja Birthday : அன்னக்கிளி தந்த அற்புத கலைஞன்! இசையின் ராஜா... இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்

இசைஞானி இளையராஜா இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது திரையுலக பயணம் பற்றிய சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 02 2024, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ilaiyaraaja

Ilaiyaraaja

இந்திய சினிமாவில் இசை முகவரி என்றால் அது இளையராஜா தான். தமிழ் திரை இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரம் கூட்டிய இசை சாம்ராஜ்ஜியம். ஸ்வரங்களாலும், மெட்டுக்களாலும் இளையராஜா கட்டமைத்த இசை எனும் பெரும் கோட்டை, உலக மக்களின் கனவு தேசமாக வரலாறு கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் ராஜாங்கம், மெல்லிய காற்றாய் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறது.

25
Isaignani Ilaiyaraaja

Isaignani Ilaiyaraaja

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் வாழ்வில் ஊறிப்போய் இருக்கிறது இளையராஜாவின் இசை. கமியூனிஸ்ட் கட்சியின் பாடகராக இருந்த அண்ணன் பாவலரிடம் இளையராஜா இசைப்பயின்றாலும், அவருக்கு இசை நுனுக்கங்களை கற்றுக்கொடுத்து மெருகேற்றியது தன்ராஜ் என்பவர் தான். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக்குழுவில் இணைய வேண்டும் என்பது இளையராஜாவின் கனவாக இருந்திருக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஜிகே வெங்கடேஷின் குழுவில் இணைந்தார்.

இதையும் படியுங்கள்... அபுதாபி.. பிரதமர் மோடி திறந்து வைத்த கோவில்.. 3ம் முறை தரிசனத்துக்கு சென்ற சுப்ரீம் ஸ்டார் - Viral Video!

35
Ilaiyaraaja Birthday

Ilaiyaraaja Birthday

பின்னர் சலீல் செளத்ரி என்கிற மகா உன்னத கலைஞரிடம் இருந்து இளையராஜாவின் திரை இசை பயணம் தொடங்கியது. செம்மீன் போன்ற படங்களில் சலீல் செளத்ரியின் இசை பிண்ணனி அன்னக்கிளியில் ராஜாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதை காணமுடியும். தமிழ் திரைப்படங்களில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டார் இளையராஜா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளன ராகம் திரைப்படத்தின் பின்னணி இசை, காலம் கடந்து இன்று காதலை கடத்திக் கொண்டே இருக்கிறது.

45
Ilaiyaraaja, SPB

Ilaiyaraaja, SPB

இளையராஜா - எஸ்.பி.பி-யின் நட்பு திரையில் நிகழ்த்திய மாயாஜாலம் அரை நூற்றாண்டுகளாக மக்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது. உதிரி பூக்கள் என்கிற திரைப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் உடனும், மூடுபனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களில் பாலு மகேந்திரா உடனும், 16 வயதினிலே உள்ளிட்ட பாரதிராஜா படங்களிலும் இளையராஜா இசை சக்ரவர்த்தியாக கோலோச்சி இருந்தார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன், ராமராஜன் ஆகியோரின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இளையராஜாவின் பங்கு அதீதம் இருக்கிறது.

55
Ilaiyaraaja, SPB Friendship

Ilaiyaraaja, SPB Friendship

வடக்கத்திய இசை ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தனி ஒரு கலைஞனாக இருந்து தமிழ் இசையை செழிக்க செய்ததிலும், இசையை மக்களுக்கு நெருக்கமாக்கியதிலும் பெரும்பங்காற்றி இருக்கிறார் இளையராஜா. இசையின் ராஜாவாக தமிழ் மக்களின் மனங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த இசை நாயகனின் 81வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை இவங்க தான்.. ராஷ்மிகா, தமன்னாலாம் கிட்ட கூட நெருங்க முடியாது..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved