- Home
- Gallery
- Sai Pallavi : சாய் பல்லவி திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்காரா? இதென்ன புதுக்கதையா இருக்கு!
Sai Pallavi : சாய் பல்லவி திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்காரா? இதென்ன புதுக்கதையா இருக்கு!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

Sai Pallavi
பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளசுகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் சாய் பல்லவி. முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன இவரை தமிழ் திரையுலகம் பக்கம் அழைத்து வந்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவர் இயக்கிய தியா படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் சாய் பல்லவி. பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் படிப்படியாக முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
Actress Sai Pallavi
இதையடுத்து டோலிவுட் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் தங்கமாக இருந்தது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்தார் சாய் பல்லவி. இதையடுத்து சூர்யா தயாரித்த கார்கி படம் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்த சாய் பல்லவி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கமல் தயாரித்துள்ள இப்படம் இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள்... தனுஷ் நடித்துள்ள 'ராயன்' படத்தை ஏன் பார்க்க வேண்டும்? 5 முக்கிய காரணங்கள் இதோ..!
sai pallavi love rumour
ஹீரோயின்கள் என்றாலே அவர்களை சுற்றி சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி அமரன் படத்தின் பூஜையின் போது அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அருகே மாலையுடன் சாய் பல்லவி நின்ற புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கடந்தாண்டு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் காட்டுத் தீ போல் பரவியதால், நடிகை சாய் பல்லவியே அது வெறும் வதந்தி என உறுதி செய்தார்.
is sai pallavi in relationship
இந்த நிலையில், தற்போது அவரைப்பற்றிய மற்றுமொரு கிசுகிசு டோலிவுட் வட்டாரத்தில் பரவத் தொடங்கி இருக்கிறது. அதன்படி நடிகை சாய் பல்லவி, திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சினி ஜோஷ் என்கிற தெலுங்கு ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சிலர் அந்த நடிகர் யார் என ஆராயத் தொடங்கினாலும், அவரது ரசிகர்கள் வழக்கம்போல் இதுவும் வதந்தியாகத் தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மும்பையில் ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கிய மாதவன்.. தலைசுற்ற வைக்கும் விலை..