Suchitra: மாயா குடும்பத்தை பார்த்து பயப்புடுகிறாரா கமல்? இருவருக்கும் இடையே உள்ள டீலிங்... சுசித்ரா அதிரடி!
ஏற்கனவே, மாயா லெஸ்பியன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, கமலஹாசன் மாயா குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா? என புதிய குண்டை தூக்கி போட்டு, அவரை பேட்டி ஒன்றில் தாக்கி பேசி உள்ளார்.
தன்னுடைய திறமையால் முன்னணி இடத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட, ஏனோ சில பிரச்சனைகளால் தடம் மாறி, தடுமாறி சென்று விடுகிறார்கள். அந்த வகையில் சுசி லீக்ஸ் என்கிற பெயரில் பல பிரபலங்களின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியவர் பாடகி சுசித்ரா. இந்த பிரச்சனைக்கு பின்னர் ஆளே இருக்கும் இடம் தெரியாமல் போனார்.
இந்த சர்ச்சைக்கு பின்னர் தன்னுடைய சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறினார் சுசித்ரா. இவரின் கணவர் கார்த்திக்கோ சுசி மன அழுத்தத்தில் உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுசி மற்றும் கார்த்திக்குமார் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய காரணமாகவும் அமைந்தது.
இந்த சர்ச்சைக்கு பின்னர் தன்னுடைய சமூக வலைதளபக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறினார் சுசித்ரா. இவரின் கணவர் கார்த்திக்கோ சுசி மன அழுத்தத்தில் உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுசி மற்றும் கார்த்திக்குமார் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய காரணமாகவும் அமைந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாகவே பிக்பாஸ் மாயா பற்றி பேட்டிகளில் பேசி வருகிறார். "அண்மையில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாயா ஒரு லெஸ்பியன் என்றும், இதுவரை நான்கு பெண்களுடன் பழகி அவர் ஏமாற்றி உள்ளதாகவும் கூறினார். மேலும் தன்னுடைய முன்னாள் கணவர் அவருக்கு சில உதவிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இப்படி மாயா மீது அடுக்கடுக்கான தகவல்களை அள்ளி வீசி வரும் சுசி, கமல்ஹாசனை டார்கெட் செய்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, கமல்ஹாசன் மற்ற போட்டியாளர்களை கேள்வி கேட்பது போல் ஏன் மாயாவை கேள்வி கேட்கவில்லை என ரவுண்டு கட்டி, தாக்கி பேசி உள்ளார். இது குறித்து இந்த பேட்டியில் பேசி உள்ள சுசித்ரா, கமல் - மாயா குடும்பத்தை பார்த்து பயப்புறுகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் கூட, மாயாவை பார்த்து கமல் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை என கூறியுள்ள சுசித்ரா, ஏற்கனவே கமலஹாசனின் விக்ரம் மற்றும் விஜய்யுடன் லியோ ஆகிய படங்களில் மாயா நடித்துள்ள நிலையில், கமலுக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்று தெரியவில்லை? ஒரு வேலை கமலஹாசனின் அடுத்தடுத்த படங்களில் அவரை நடிக்க கமிட் செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவர் மாயாவை... கேள்வி கேட்க தயங்குகிறாரா என பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக தீயாக பரவி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D