ஐபிஎல் 2024 வர்த்தக மதிப்பு 6.5 சதவிகிதம் அதிகரித்து 1,35,000 கோடியாக உயர்வு!
ஐபிஎல் 2024 தொடரின் வர்த்தக மதிப்பானது 6.5 சதவிகிதம் அதிகரித்து 1,35,000 கோடியாக அதிகரித்துள்ளது.

IPL 2024 business Value
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
IPL Brand Value
இதில், ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரின் வர்த்தக மதிப்பானது 6.5 சதவிகிதம் அதிகரித்து 16.4 பில்லியன் டாலராக உள்ளது. உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோகி, சமீபத்திய அறிக்கையில் ஐபிஎல்-ன் வணிக மதிப்பு 6.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
RR Brand Value
அதே நேரத்தில் அதன் பிராண்ட் மதிப்பு கடந்த ஒரு வருட காலத்தில் 6.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஐபிஎல் உரிமையாளர்களின் பிராண்ட் மதிப்பை வெளிப்படுத்திய இந்த வங்கியானது, நட்சத்திரங்கள் நிறைந்த மும்பை இந்தியன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிக மதிப்புள்ள அணி இல்லை என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.
GT Brand Value
அறிக்கையின்படி, ஐபிஎல்-ன் வணிக மதிப்பு 6.5 சதவிகிதம் அதிகரித்து 16.4 பில்லியன் (ரூ.1,35,000 கோடி) அமெரிக்க டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு 3.4 பில்லியன் (ரூ.28,000 கோடி) டாலராக இருந்தது.
PBKS Brand Value
ஐபிஎல் தொடரில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிஎஸ்கேயின் பிராண்ட் மதிப்பு 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சிஎஸ்கேயின் பிராண்ட் மதிப்பு 231.0 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
LSG brand Value
இதே போன்று நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டை விட 19.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் பிராண்ட் மதிப்பு 16.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
IPL 2024 Business Value and Franchises Brand Value
பஞ்சாப் கிங்ஸ் 12.2 சதவிகிதமும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10.8 சதவிகிதமும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 9.6 சதவிகிதமும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9 சதவிகிதமும், மும்பை இந்தியன்ஸ் 7.4 சதவிகிதமும் (204 மில்லியன் டாலர்), குஜராத் டைட்டன்ஸ் 3.3 சதவிகிதமும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3.1 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.
MI Brand Value
நடப்பு ஆண்டு 2024 முதல் 2028 ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டு காலத்திற்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பாக டாடா நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2500 கோடி) ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.