JOB : டாடா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.! தகுதி, சம்பளம் என்ன.? உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
தமிழக அரசு, டாடா குழுமத்தில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் உள்ள தொழிற்சாலைக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நேர்காணல் நடைபெறும்.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பல தனியார் நிறுவனங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரபல டாடா குழுமத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அந்த வகையில் ஓசூரில் உள்ள தொழிற்சாலைக்கு பணியாளர்கள் தேர்வானது நடைபெறவுள்ளது.
பணிக்கான தகுதிகள் :
FTE: FIXED TERM EMPLOYMENT
கல்வி தகுதி : +2 & Any Arts Degree with (Electronics Manufacturing sector Experience)
வயது : 18+ (பெண்களுக்கு முன்னுரிமை)
மாத ஊதியம் : CTC-19,629 per Month
கால அளவு : 15 Months
குறிப்பு :
1. EMS இல் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறைக்கு பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
2. உங்கள் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் ஜெராக்ஸ் நகல்கள் இரண்டையும் கொண்டு வருவதை உறுதி செய்யவும்.
இடம்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், Collectorate Campus, வந்தவாசி ரோடு அருகில், காஞ்சிபுரம். தொடர்பு எண் 044 27237124 மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுகலகம், D Block, Ground Floor. Collectorate Campus. செங்கல்பட்டு.
போன்: 044 27426020
நேர்காணல் நடைபெறும் இடம்
தஞ்சாவூர், திருச்சி,புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த பணியாளர்கள் செப்டம்பர் 6ஆம் தேதியிமு செப்டம்பர் 7 ஆம் தேதியும் அந்த அந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலை வாய்ப்புக்கான அத்தியாவசியப் பயிற்சி:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்தியாவசியப்பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்:
TATA நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவத்திற்குப் பிறகு இளநிலை ( Manufacturing) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு