உடனே அறிக்கையை கொடுங்க! பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து, பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Department of Elementary Education
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தலைமைச் செயலர் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 100 சதவீத உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டால் பொதுப் பணித்துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Government School
இதுதவிர அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டிடங்களை ஆய்வு செய்து தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு 2 வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட வரும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பொறியாளருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இதையும் படிங்க: School College Holiday: ஆகஸ்ட் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியாக போகும் அறிவிப்பு!
District Education Officers
மேலும், அவர்கள் உதவியுடன் தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் தேவைப்படும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.