- Home
- Gallery
- கல்கி 2898AD மட்டுமில்ல இத்தனை படங்களில் வில்லனாக அட்ராசிட்டி செய்துள்ளாரா கமல்ஹாசன்? முழு லிஸ்ட் இதோ
கல்கி 2898AD மட்டுமில்ல இத்தனை படங்களில் வில்லனாக அட்ராசிட்டி செய்துள்ளாரா கமல்ஹாசன்? முழு லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் கமல்ஹாசன் கல்கி 2898AD படத்துக்கு முன் வில்லனாக நடித்த படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Sigappu Rojakkal
சிகப்பு ரோஜாக்கள்
கமல்ஹாசன் - பாரதிராஜா கூட்டணியில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் தான் சிகப்பு ரோஜாக்கள். 1978ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் திலீப் என்கிற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய கமலுக்கு இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.
Indian
இந்தியன்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் தந்தை ரோலில் சேனாபதி எனும் விடுதலை போராட்ட வீரராக நடித்திருந்தார். அதேபோல் அவரது மகன் கதாபாத்திரம் ஊழல் செய்யும் அரசு அதிகாரியாக நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருது கிடைத்தது.
இதையும் படியுங்கள்... TVK VIJAY : அப்போ ஜிஎஸ்டி... இப்போ நீட்... பாஜகவிற்கு எதிராக அதிரடியாக களம் இறங்கிய விஜய்- நடக்கப்போவது என்ன.?
Aalavandhan
ஆளவந்தான்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் ஆளவந்தான். இப்படம் அந்த சமயத்தில் பெரியளவில் கொண்டாடப்படாவிட்டாலும் தற்போது ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இதிலும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன், அதில் ஒன்று மிரட்டலான வில்லன் வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Dasavatharam
தசவதாரம்
கமல்ஹாசன் 10 விதவிதமான கெட் அப்களில் நடித்து கலக்கிய திரைப்படம் தான் தசவதாரம். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் கமல் நடித்த 10 கதாபாத்திரங்களில் பிளெட்சர் என்கிற வில்லன் கதாபாத்திரமும் ஒன்று. அதில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டி இருந்தார் கமல். அந்த கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
Kalki 2898AD
கல்கி 2898AD
கமல்ஹாசன் வில்லனாக நடித்த படங்களின் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ள இப்படத்தில் யாஷ்கின் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல். முதல் பாகத்தில் இவர் கம்மியான சீன்களில் மட்டும் வந்திருந்தாலும் இரண்டாம் பாகத்தில் நிறைய காட்சிகளில் மிரட்ட இருக்கிறாராம்.
இதையும் படியுங்கள்... TVK VIJAY : அப்போ ஜிஎஸ்டி... இப்போ நீட்... பாஜகவிற்கு எதிராக அதிரடியாக களம் இறங்கிய விஜய்- நடக்கப்போவது என்ன.?