மறைந்த மீரா விஜய் ஆண்டனி.. இன்று நடக்கவிருந்த இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் - தாமதமாக என்ன காரணம்?
பிரபல தமிழ் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மீரா விஜய் ஆண்டனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நாளை செப்டம்பர் 20ம் தேதி காலை, கீழ்பாக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Vijay Antony Daughter Death
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் ஏற்கனவே தனது தந்தையை இழந்து வாழ்ந்து வரும் ஒரு சிறந்த கலைஞர். இந்நிலையில் இன்று அதிகாலை அவருடைய மூத்த மகள் மீரா விஜய் ஆண்டனி அவர்களும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
Actor Parthiban
தளபதி விஜய் அவர்களின் தாய் சோபா, முன்னணி இயக்குனர் பார்த்திபன், நடிகர் சித்தார்த் நடிகர், மூத்த நடிகர் பிரபுதேவா உள்ளிட்ட பலரும் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு நேரடியாக வந்து அவருக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளனர். இறந்த மீராவின், பள்ளி ஆசிரியர்களும் கண்ணீர் மல்க நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளனர்.
Vijay Antony
இந்நிலையில் இன்று மாலை சென்னி கீழ்ப்பாக்கத்தில் மீராவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லறையில் இன்று இடம் கிடைக்காத காரணத்தால், நாளை காலை 8 மணி முதல் 11 மணிக்குள் மீராவின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பு மகளை இழந்த விஜய் ஆண்டனிக்கு ஒட்டுமொத்த தமிழாகவே ஆறுதல் கூறி வருகின்றது.