- Home
- Gallery
- Indian 2 Story : செம மிரட்டலா இருக்கே.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? தீயாக பரவும் தகவல்..
Indian 2 Story : செம மிரட்டலா இருக்கே.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? தீயாக பரவும் தகவல்..
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

indian 2
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் 2 படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. சுமார் ரூ.250 கோடிக்கும் மேலான பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Indian 2
1996-ம் ஆண்டு ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 படம் உருவாகி உள்ளது.. இத்தனை ஆண்டுகள் ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
Indian 2 surprise out director Shankar reveals
இந்தியன் 2 படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டே வெளியானாலும், 2019-ம் ஆண்டு தான் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. எனினும் கிரென் விபத்து, கொரோனா பெருந்தொற்று என பல தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாக ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Indian 2
ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் சுதந்திர போராட்ட வீரரின் கதை தான் இந்தியன். படத்தின் திரைக்கதை, வசனம், மேக்கிங், இசை என ஒவ்வொன்றுமே இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும். இந்தியன் தாத்தா என்றாலே பயம் ஏற்படும் அளவுக்கு கமல்ஹாசன் மிரட்டி இருப்பார். இந்தியன் படத்தின் இறுதியில் கமல்ஹாசன் வேறொரு நாட்டிற்கு தப்பி சென்றது போல் காட்டப்பட்டிருக்கும். அப்போதே இந்தியன் 2 படத்திற்கான லீடை ஷங்கர் கொடுத்திருப்பார்.
Indian 2
இந்த நிலையில் 'இந்தியன் 2' கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சமூக ஊடகங்களில் ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு இளைஞருக்கு (சித்தார்த்) ஆதரவாகப் போராட சேனாபதி (கமல்ஹாசன்) இந்தியாவுக்குத் திரும்புவதுதான் 'இந்தியன் 2' படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஒரு கடினமான சூழ்நிலையிலிருந்து சித்தார்த்தை காப்பாற்ற சேனாபதி இந்தியா திரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
Indian 2
அவர் இந்தியா திரும்பும் நேரத்திலும் நாடு முழுவதும் ஊழல் முன்பைவிட பன்மடங்கு அதிகரித்திருப்பதால் அவர் மீண்டும் நாட்டின் நலனுக்காக போராடுகிறார் என்றும் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
Indian 2
இந்த படம் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த படம் ஏதேனும் சர்ச்சையை எதிர்கொள்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருக்க தான் வேண்டும்.
Indian 2
இந்தியன் 2 படத்தின் நீளம் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளதால் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியன் 3 படம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் கூட சமீபத்தில் இந்த தகவலை உறுதிபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.