இந்த காலத்துல இப்படி ஒரு ஹீரோயினா! ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங் - Exclusive போட்டோஸ் இதோ
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.
Rakul Preet Singh
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் கடந்த 2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக் ஆகும்.
Actress Rakul Preet Singh
இதையடுத்து 2011-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோயினாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் யுவன். இதன்பின்னர் மகிழ் திருமேனி இயக்கிய தடையறத் தாக்க படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் கவனம் பெற்றார்.
Indian 2 actress Rakul Preet Singh
பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர், எச்.வினோத் இயக்கிய தீரண் அதிகாரம் ஒன்று, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
Ayalaan heroine Rakul Preet Singh
தமிழில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கைவசம் இந்தியன் 2 மற்றும் அயலான் என இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன. இதில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Rakul Preet Singh Birthday
அதேபோல் அயலான் படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங், இப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
Rakul Preet Singh Birthday celebration
இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
Rakul Preet Singh Birthday celebration with fans
இதனிடையே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். மும்பையில் தனக்காக கேக்குடன் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து தன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இந்த காலத்துல இப்படி ஒரு ஹீரோயினா என ஆச்சர்யத்துடன அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிரபுதேவா சாயலில் இருப்பதால் தான் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சாங்களாம்..! பிரபலம் சொன்ன ஷாக்கிங் சீக்ரெட்