MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமணத்துக்கு முன்பே வருங்கால மனைவி அதிதி ராவ் உடன் வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்ற சித்தார்த் - போட்டோஸ் இதோ

திருமணத்துக்கு முன்பே வருங்கால மனைவி அதிதி ராவ் உடன் வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்ற சித்தார்த் - போட்டோஸ் இதோ

இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சித்தார்த், தன்னுடைய வருங்கால மனைவி அதிதி ராவ் உடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 02 2024, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
siddharth

siddharth

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். இதையடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் சித்தார்த், மேக்னா நாராயண் என்பவரை கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2007-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சித்தார்த்.

26
siddharth lover

siddharth lover

இதையடுத்து நடிகை சமந்தா மீது காதல் வயப்பட்டார் சித்தார்த். இவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு விழாக்களிலும் கலந்துகொண்டனர். இவர்களது காதல் திருமணத்தில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

36
siddharth - Aditi Rao

siddharth - Aditi Rao

பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சித்தார்த், தெலுங்கில் மகா சமுத்திரம் என்கிற படத்தில் அதிதி ராவ் ஜோடியாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியலை இழுத்து மூடிய சன் டிவி... கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணீர்மல்க பிரபலங்கள் எடுத்த போட்டோஸ்

46
siddharth Lover Aditi Rao Hydari

siddharth Lover Aditi Rao Hydari

ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்று சிம்பிளாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களது திருமண தேதி இன்னும் உறுதியாகவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் சித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

56
siddharth and Aditi Rao Italy Trip photos

siddharth and Aditi Rao Italy Trip photos

இந்த நிலையில் சித்தார்த், தன்னுடைய வருங்கால மனைவி அதிதி ராவ் உடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். இத்தாலி நாட்டில் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை நடிகர் சித்தார்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

66
siddharth And Aditi Rao Hydari Vacation Photos

siddharth And Aditi Rao Hydari Vacation Photos

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை புறக்கணித்துவிட்டு அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தான் முன்னரே திட்டமிட்ட ட்ரிப் என்பதால் அதை கேன்சல் செய்ய முடியவில்லை என்றும், அதனால் தான் இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் கலந்துகொள்ள முடியவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளதோடு, படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Ilaiyaraaja : மகளை பறிகொடுத்திருக்கிறேன்... பவதாரிணி மறைவால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன இளையராஜா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved