ஷிவம் துபே, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு – டாஸ் வென்ற இந்தியா பவுலிங்!
அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

India vs Ireland, 8th Match
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இது ரோகித் சர்மாவின் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
India vs Ireland, 8th Match
இந்தப் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
India vs Ireland, 8th Match
உலகக் கோப்பை தொடரில் 1000 ரன்களை கடக்க இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 37 ரன்கள் எடுக்க வேண்டும். இதே போன்று ரிஷப் பண்ட் 11 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்து சாதனை படைப்பார். அக்ஷர் படேல் ஒரு விக்கெட் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்
India vs Ireland, 8th Match
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது முதல் முறையாக இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை தொடரில் மோதுகின்றன.
India vs Ireland, 8th Match
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
அயர்லாந்து:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பல்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பெர், ஜார்ஜ் டாக்ரெல், கெராத் டெலானி, மார்க் அடையர், பேரி மெக்கர்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.
IND vs IRE, T20 World Cup 2024
அயர்லாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா விளையாடிய 3 டி20 போட்டிகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் தீபக் கூடா 151 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 3 ரன்கள் எடுத்தால் அவரது சாதனையை முறியடிப்பார்.
India vs Ireland, 8th Match
இதுவரையில் ரோகித் சர்மா விளையாடிய 151 டி20 போட்டிகளில் 3974 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 26 ரன்கள் எடுத்தால் 3ஆவது கிரிக்கெட் வீரராக 4000 ரன்களை கடந்து சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக விராட் கோலி 4037 ரன்களும், பாபர் அசாம் 4023 ரன்களும் எடுத்துள்ளனர். இதுவே ரோகித் சர்மா 37 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்த 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
Rohit Sharma, T20 World Cup 2024
மேலும், ரோகித் சர்மா விளையாடிய 472 சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 597 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசினால் சர்வதேச டி20 போட்டியில் 600 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
India vs Ireland, 8th Match
நாளை நடைபெறும் போட்டியின் மூலமாக ரோகித் சர்மா 40ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். இதன் மூலமாக முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் 40 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். இதற்கு முன்னதாக வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் 8 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியுள்ளார்.
India vs Ireland, 8th Match
ரோகித் சர்மா மட்டுமே 9ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். நாளை நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால் எம்.எஸ்.தோனியின் 41 வெற்றி சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார். இதற்கு முன்னதாக ரோகித் சர்மா கேப்டனாக விளையாடிய 54 டி20 போட்டிகளில் 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.