வான வேடிக்கை காட்டிய ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா – இந்தியா 182 ரன்கள் குவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கடைசி வார்ம் அப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்துள்ளது.

IND vs BAN, T20 World Cup 2024
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியானது 14 வீரர்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்கியது. விராட் கோலி இந்த வார்ம் அப் போட்டியில் பங்கேற்கவில்லை.
India vs Bangladesh, Warm Up Matches
ரோகித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சாம்சன்1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இதற்கிடையில் தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
IND vs BAN, T20 World Cup 2024 Warm Up
இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஒருபுறம் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
IND vs BAN Warm Up Match
சிக்ஸர் மன்னன் ஷிவம் துபே 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் நடையை கட்டினார். கடைசியில் வந்த துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் எடுக்கவே இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்துள்ளது.
India vs Bangladesh Warm Up Match
பவுலிங்கைப் பொறுத்த வரையில் மஹெதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், மஹ்மதுல்லா, தன்வீர் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்
IND vs BAN, T20 World Cup 2024
வங்கதேசம்:
லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சவுமியா சர்கார், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), தவ்ஹீத் ஹிரிடோய், ஷாகீப் அல் ஹசன், மஹ்முல்லா, ஜாகெர் அலி, மஹெடி ஹசன், ரிஷத் ஹூசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்ஷித் ஹாசன், தன்ஷிம் ஹசன் ஷாகீப், தன்வீர் இஸ்லாம்.