- Home
- Gallery
- ரூ.3,650 கோடி வசூல்.. இந்தியாவின் அதிக வசூல் செய்த படம் இது தான்.. ஷோலே, பாகுபலி, தங்கல் இல்ல..
ரூ.3,650 கோடி வசூல்.. இந்தியாவின் அதிக வசூல் செய்த படம் இது தான்.. ஷோலே, பாகுபலி, தங்கல் இல்ல..
ஒரு படம் ரூ.3000 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Mughal e Azam
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 கோடி வசூல் செய்தாலே அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 1000 கோடி வசூல் என்பது வெற்றியின் அளவுகோலாக உள்ளது. இந்தியாவில் பல படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. டங்கல், பாகுபலி 2, RRR, கே.ஜி.எஃப் 2, பதான், ஜவான் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
Mughal e Azam
ரூ.2000 கோடி வசூலித்த ஒரே இந்தியப் படமாக டங்கல் உள்ளது, ஆனால், ஒரு படம் ரூ.3000 கோடியை தாண்டியது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். கே.ஆசிப்பின் முகல்-இ-ஆஸம், அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 1960ல் திரையரங்குகளில் வெளியானபோது, அதுவரை எந்த இந்தியப் படமும் இல்லாத அளவுக்கு வெறும் 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தது.
60களில் ரூ.10 கோடி இன்றைய மதிப்பில் இந்த படம் ரூ. 3650 கோடியாக இருக்கும், இதுவரை எந்த இந்தியப் படமும் இந்தளவு வசூல் சாதனை செய்யவில்லை. 1960-ல் மிக விலையுயர்ந்த டிக்கெட்டுகள் ரூ.1.50 ஆக இருந்தது, இன்று சராசரி டிக்கெட் விலை ரூ.200-க்கும் அதிகமாக உள்ளது.
Mughal e Azam
திலீப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர், துர்கா கோட்டே மற்றும் அஜித் நடித்த முகல்-இ-ஆசம் ஒரு வரலாற்றுக் காவியமாகும், இது முகலாய இளவரசர் சலீம் தனது தந்தை பேரரசர் அக்பருக்கு எதிரான கிளர்ச்சி, வேசி அனார்கலியின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் முகல்-இ-ஆஸம் படத்தின் டிக்கெட் மட்டும் 10 கோடி டிக்கெட்கள் விற்பனையானதாம். இது RRR (4.4 கோடி) மற்றும் ஜவான் (3.9 கோடி) போன்ற சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.
ஷோலே மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்தியாவில் முகல்-இ-ஆசாம் படத்தை விட அதிக டிக்கெட்டுகளை விற்றுள்ளன. இன்றைய ரூபாய் மதிப்பின் படி, ரூ.3000 கோடியைத் தாண்டிய ஒரே படம் முகல்-இ-ஆசம் என்று கூறப்படுகிறது.