சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை – இந்தியா பிளேயிங் 11 எப்படி இருக்கும்?
டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் சஞ்சு சாம்சன் இடம் பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs IRE, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. நியூயார்க்கில் நடைபெறும் இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா வார்ம் அப் போட்டியில் விளையாடியது. இதில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs IRE, T20 World Cup 2024
இதில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. மேலும், விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும், ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்றும் விமர்சனம் எழுந்தது.
IND vs IRE, T20 World Cup 2024
டாப் ஆர்டரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும், சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India Playing 11
ஏற்கனவே விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இடம் பெறும் நிலையில், சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணின் பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.