MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அக்‌ஷர் அண்ட் குல்தீப் சுழலில் சுருண்ட இங்கிலாந்து – 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியா!

அக்‌ஷர் அண்ட் குல்தீப் சுழலில் சுருண்ட இங்கிலாந்து – 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியா!

இங்கிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

2 Min read
Rsiva kumar
Published : Jun 28 2024, 01:45 AM IST| Updated : Jul 19 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

கயானாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மழையை கருத்தில் கொண்டு பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களும் எடுத்தனர்.

29
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட் எடுத்தார். ரீஸ் டாப்லி, ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரண், அடில் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

39
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

இதில், முதல் 3 ஓவர்களில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது. 4ஆவது ஓவரை அக்‌ஷர் படேல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜோஸ் பட்லர் 23 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

49
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

போட்டியின் 4.4 ஆவது ஓவரில் பிலிப் சால்ட் கிளீன் போல்டானார். விராட் கோலி எப்படி ஆட்டமிழந்தாரோ அதே போன்று பும்ரா பந்தில் சால்ட் கிளீன் போல்டானார். இதே போன்று அக்‌ஷர் படேல் வீசிய போட்டியின் 5.1 ஆவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 0 ரன்னில் நடையை கட்டினார். இதையடுத்து 7.1ஆவது ஓவரில் மொயீன் அலி ஸ்டெம்பிங் முறையில் 8 ரன்னில் நடையை கட்டினார்.

59
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

அப்போது இங்கிலாந்து 8 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து குல்தீப் யாதவ் பந்து வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரண் 2 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியில் 10.4ஆவது ஓவரில் ஹாரி ஃப்ரூக் (25 ரன்கள்) விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.

69
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

அப்போது இங்கிலாந்து 11 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் தனது கடைசி ஓவரில் கிறிஸ் ஜோர்டன் விக்கெட்டை எடுத்தார். இதன் மூலமாக இந்த தொடரில் குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதே போன்று அக்‌ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார்.

79
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

போட்டியின் 14.5ஆவது ஓவரின் லியாம் லிவிங்ஸ்டன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அடில் ரஷீத் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, கடைசியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

89
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

இதன் மூலமாக இங்கிலாந்து 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக முதல் முறையாக தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது.

99
India vs England, Semi Final 2, T20 World Cup 2024

India vs England, Semi Final 2, T20 World Cup 2024

அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது. அதில் இலங்கையிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்துள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரோகித் சர்மா
விராட் கோலி
குல்தீப் யாதவ்
அக்சர் படேல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved