- Home
- Gallery
- சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபேயின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி – விராட் கோலி மோசமான சாதனை!
சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபேயின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி – விராட் கோலி மோசமான சாதனை!
அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

United States vs India, T20 World Cup 2024
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 25ஆவது போட்டி நியூயார்க்கில் நடைபெற்றது இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அமெரிக்கா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
United States vs India, T20 World Cup 2024
அதன்படி கேப்டன் மோனன்க் படேல் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஷயான் ஜஹாங்கீர் இடம் பெற்றுள்ளார். இதே போன்று, நோஸ்துஷ் கென்ஜிகே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷாட்லி வான் ஷால்க்விக் அணியில் இடம் பெற்றுள்ளார்.
United States vs India, T20 World Cup 2024
சயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ஜஹாங்கீர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.
United States vs India, T20 World Cup 2024
அதே ஓவரின் கடைசி பந்திலும் விக்கெட் எடுத்தார். ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் ஓவரின் முதல் பந்தில் மட்டுமின்றி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்தியராகவும் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.
United States vs India, T20 World Cup 2024
கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களில் வெளியேற, நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் பொறுமையாக விளையாடி 27 ரன்கள் எடுக்கவே, கோரி ஆண்டர்சன் 14 ரன்களும், ஹர்மீத் சிங் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் வான் ஷால்க்விக் 11 ரன்கள் எடுத்துக் கொடுக்க ஜஸ்தீப் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
United States vs India, T20 World Cup 2024
இறுதியாக அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
United States vs India, T20 World Cup 2024
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி, மும்பை வீரரான சவுரப் நெட்ராவால்கர் பந்தில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
Virat Kohli Golden Duck out
இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி தொடர்ந்து 1, 4 மற்றும் 0 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். அமெரிக்காவில் விளையாடிய 6 டி20 போட்டிகளில் கோலி மொத்தமாக 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
United States vs India, T20 World Cup 2024
இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் மீண்டும் நெட்ராவால்கர் பந்தில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
United States vs India, T20 World Cup 2024
முதல் 6 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் பவர்பிளேயில் இந்திய அணி எடுத்த குறைவான பவர்பிளே ஸ்கோர் இதுவாகும்.
United States vs India, T20 World Cup 2024
10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு சூர்யகுமார் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
United States vs India, T20 World Cup 2024
சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அதிக பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இறுதியாக இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
United States vs India, T20 World Cup 2024
இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் 24 ஆம் தேதி செயிண்ட் லூசியாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.