ரோகித் சர்மாவின் அதிரடியால் எளிய வெற்றியை பதிவு செய்த டீம் இந்தியா!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

India vs Ireland, 8th Match
நியூயார்க்கில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
India vs Ireland, 8th Match
மேலும், ஷிவம் துபே, அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 7 போட்டிகளிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது முதல் முறையாக இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் மோதுகின்றன.
India vs Ireland, 8th Match
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 2, ஆண்ட்ரூ பல்பிர்னி 5 என்று தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஒரே ஓவரில் அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தனர். லோர்கன் டக்கர் 10 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழக்க, ஹாரி டெக்டர் 4 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
India vs Ireland, 8th Match
கர்டிஸ் காம்பெர் 12 ரன்களிலும், ஜார்ஜ் டாக்ரெல் 3 ரன்களிலும், மார்க் அடையர் 3, பே மக்கர்தி 0, ஜோஷுவா லிட்டில் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கெராத் டெலானி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
India vs Ireland, 8th Match
இறுதியாக அயர்லாந்து 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
India vs Ireland, 8th Match
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார். ரோகித் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் குவித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.
India vs Ireland, 8th Match
இறுதியாக இந்தியா 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்துள்ளது. இந்தப் போட்டி உள்பட அயர்லாந்து அணிக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாடிய இந்தியா 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
India vs Ireland, 8th Match
மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 41 வெற்றிகளை பெற்றுள்ள தோனியின் சாதனையை ஒரு கேப்டனாக ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
India vs Ireland, 8th Match
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
அயர்லாந்து:
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பல்பிர்னி, லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பெர், ஜார்ஜ் டாக்ரெல், கெராத் டெலானி, மார்க் அடையர், பேரி மெக்கர்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.