MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஹீரோவாக ஜொலித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஹீரோவாக ஜொலித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

இங்கிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளனர்.

2 Min read
Rsiva kumar
Published : Jun 28 2024, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடைரின் 2ஆவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணியானது மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் இந்திய அணி 171 ரன்கள் குவித்தது.

28
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

பின்னர் கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் 3 ஓவர்கள் வரையில் விக்கெட்டுகளை இழக்காத இங்கிலாந்து, அதன் பிறகு அக்‌ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அக்‌ஷர் மற்றும் குல்தீப் இருவரும் தங்களது ஓவர்களில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துக் கொடுத்தனர்.

38
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

ஜஸ்ப்ரித் பும்ரா தன் பங்கிற்கு வேகத்தில் மிரட்டவே இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். இதில் அதிகபட்சமாக ஹாரி ஃப்ரூக் 25 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 16.4 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

48
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா 10 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக முதல் முறையாக தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது.

58
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது. அதில் இலங்கையிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

68
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

இந்த நிலையில் தான் தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்துள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

78
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில் பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

88
India vs England, Semi Final 2

India vs England, Semi Final 2

கயானாவில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அக்சர் படேல்
ரோகித் சர்மா
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved