இந்தியா – அயர்லாந்து போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு?
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 8ஆவது போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

Rain, IND vs IRE
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலகக் கோப்பை தொடரின் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
IND vs IRE, T20 World Cup 2024
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன. இந்த நிலையில் தான் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் மழை குறுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
T20 World Cup 2024
மழைப்பொழிவுக்கான 10 சதவீத மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மழையைத் தவிர, 55-60% வரையில் மைதானம் ஈரப்பதத்துடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
India vs Ireland, T20 World Cup 2024
கடந்த சில தினங்களாக பர்படாஸில் மழை பெய்து வருகிறது. ஆனால் நியூயார்க்கில் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மாறாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India Playing 11
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.