இந்தியா – கனடா போட்டியும் மழையால் ரத்து – சிக்கலில் விராட் கோலி!
இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையின் காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

IND vs CAN T20 WC 2024
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து கடைசி போட்டியாக கனடா அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்தப் போட்டி நேற்று ஃப்ளோரிடாவில் நடைபெற இருந்தது.
IND vs CAN T20 WC 2024
கடந்த சில நாட்களாக ஃப்ளோரிடாவில் கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தான் நேற்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான 33ஆவது போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Indian Team Practice
டாஸ் கூட போட முடியாத நிலையில் இந்தப் போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடித்தது. அமெரிக்கா 5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது.
IND vs CAN T20 WC 2024
குரூப் பி ஏ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, அமெரிக்கா, கனடா ஆகிய 3 அணிகளும் 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா தவிர பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
IND vs CAN T20 WC 2024
அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.