எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதோ!!
Eating Direction : வாஸ்து சாஸ்திரத்தின் படி, உணவை எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் நாம் சாப்பிடும் முறை.
ஆம், நாம் சாப்பிடுவதில் பல முறைகள் உள்ளது. எப்படி எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி உணவை எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
கிழக்கு திசை : கிழக்கு திசை இந்திரனுக்கு உரிய திசை என்பதால் இந்த திசை நோக்கி சாப்பிட்டால் ஆயுள் நீடிக்கும், உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் மற்றும் கல்வி மேம்படும்.
மேற்கு திசை : மேற்கு திசை செல்வதற்கு அதிபதியான லட்சுமி தேவிக்கு உரிய திசையாகும். எனவே, இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் வீட்டில் செல்வம் பெருகும், பொருள் சேரும், செய்யும் தொழில் வளர்ச்சி அடையும்.
தெற்கு திசை : தெற்கு திசை எமனுக்கு உரிய திசை ஏறும் என்பதால், இந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் புகழ், நற்பெயர் கிடைக்கும்.
வடக்கு திசை : வடக்கு திசை சிவனுக்குரிய திசை என்பதால், இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். ஏனெனில் இந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வர வாய்ப்புள்ளது மற்றும் உறவுகளில் விரிசல் ஏற்படும்.