எடை இழப்பு முதல் சரும புற்றுநோய் வரை.. ஊட்டச்சத்துகளை வாரி வழங்குவது 'இந்த' பருப்பு தான்!!
Moong Dal Benefits : தினமும் உங்கள் உணவில் பாசிப்பயறை சேர்ப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நாம் ஆரோக்கியமாக இருக்க உணவில் பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். பருப்பு வகைகள் பல உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், பச்சை பயிறு அல்லது பாசிப்பருப்பு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது.
இந்த பாசிப்பருப்பை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் அதில் இருக்கும் சத்துக்களை முழுமையாக பெறலாம். இந்த பருப்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, இப்போது இந்த பாசிப்பயறை உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
எடை குறையும் : நீங்கள் உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தினமும் உங்கள் உணவில் பாசிப்பயறை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இது உங்கள் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மற்றும் இதில் சத்துக்கள் நிறைந்திருப்பதால், ஆரோக்கியத்துடன் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.
சர்க்கரை நோய் : சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாசிப்பருப்பு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: பருப்பு சாப்பிட்டா எடை குறையுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்
ரத்த அழுத்தம் : தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உயர் ரத்த அழுத்த பிரச்சனை தற்போது பொதுவாகிவிட்டது. நீங்களும் இந்த பிரச்சினை எதிர்கொண்டால் தினமும் உங்கள் உணவில் பாசிப்பயறை சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
ரத்த சோகை : ரத்த சோகை வருவதற்கு முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடு தான். உங்கள் உணவில்பாசிப்பயறை சேருங்கள். உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். இரத்த சோகை பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடுவீர்கள்.
இதையும் படிங்க: பாசிப்பயறு ஆரோக்கியம் தான்... ஆனால் தினமும் சாப்பிடாதீங்க... தீமை விளையும்..!!
சரும புற்றுநோய் : வெயிலில் அதிக இருப்போருக்கு சரும புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. எனவே, நீங்கள் வெயிலில் அதிக நேரம் இருக்கும் நபர் என்றால், உங்கள் உணவில் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். சரும புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்