- Home
- Gallery
- ஒருபுறம் புருஷன்.. மற்றொரு புறம் கள்ளக்காதலன்.. இடையில் சிக்கிய பெண்.. வேறு வழியில்லாமல் எடுத்த அதிரடி முடிவு!
ஒருபுறம் புருஷன்.. மற்றொரு புறம் கள்ளக்காதலன்.. இடையில் சிக்கிய பெண்.. வேறு வழியில்லாமல் எடுத்த அதிரடி முடிவு!
சென்னையில் தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai News
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயசாந்தி (41). இவர் வண்ணாரப்பேட்டை உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் சரவணன் வெளிநாட்டில் வேலை செய்தபோது, சம்பளத்தை மணலி புதுநகரில் உள்ள தனது தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் என்பவருக்கு அனுப்பி வைத்தார். அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வாங்க சென்ற வந்த போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
chennai illegal love
அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து வந்த கணவர் சரவணனுக்கு மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தது மட்டுமல்லாமல் அடித்து உதைத்துள்ளார். ஆனால் மற்றொரு புறம் தன்னுடன் கள்ளக்காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணனும் விஜயசாந்தியை விடாமல் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் என்ன செய்வது தெரியாமல் மனவேதனை அடைந்தார்.
இதையும் படிங்க: வேலைக்கு வந்த சித்தாளை கரெக்ட் செய்து உல்லாசம்.. கழற்றிவிட நினைத்ததால் ஆத்திரத்தில் மேஸ்திரி செய்த காரியம்!
Women Suicide
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயசாந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கெஞ்சிய காதலன்! இறங்கி வந்து ஆபாசமாக வீடியோ எடுத்து அனுப்பிய பள்ளி மாணவி! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
Police Arrest
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தியின் வீட்டில் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், "என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட உறவினரான சரவணன் ஆகியோர்தான் காரணம்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், விஜயசாந்தியின் கணவரான பெயிண்டர் சரவணன் மற்றும் அவரது உறவுக்காரரான மெக்கானிக் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.